தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தம்மை பயமுறுத்துவோர் [...]

நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?

சிறீலங்காவின் நடந்து முடிந்த தேர்தல் தமிழர்களுக்கும் தமிழர்களுக்காய் நீதிகோரும் தரப்புக்கும் என்ன சொல்கின்றது? இந்த தேர்தலின் மூலம் தமிழர்கள் சிறீலங்காவிற்கும் உலகத்திற்கும் தங்களின் வாக்குகளின் மூலம் என்ன சொல்லியிருக்கின்றனர்?

இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்ய நடவடிக்கை

இலங்கைக்குள் பிரவேசித்த புலி ஆதரவாளர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்த நபர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைவார் என்ற நம்பிக்கையில் குறித்த நபர்கள் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இவ்வாறான நபர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயல்களினால் வடக்கு கிழக்கில் ஆளும் கட்சி தோல்வியடைந்தது: முரளிதரன்

பிரதேச அரசியல்வாதி ஒருவரின் தவறான செயற்பாடுகளினால் வடக்கு கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறைந்த வாக்குகளைப் பெற்றுக்கொள்ள நேர்ந்ததாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேச அரசியல்வாதி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்த போதிலும், தமது ஆதரவாளர்களை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்கும் முனைப்புக்களில் ஈடுபடுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

போலியான வாக்குறுதிகளை அளித்து வடக்கு கிழக்கு மக்களை குறித்த அரசியல் தலைவர் ஏமாற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முகஸ்துதிக்காக ஜனாதிபதியையும், பசில் ராஜபக்ஷவையும் [...]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ராஜினாமாவை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் யாழில் தமது கட்சிக்கு மக்கள் வாக்களிக்காமையை அடுத்து அமைச்சுப்பதவியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்தும் விலகப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்த ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இன்று ராஜினாமா தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வது தொடர்பாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று காலை தெரிவித்தார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைக்கவில்லை. அதனால் [...]

அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாவலர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு

வவுனியாவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அடியாட்கள், வெள்ளை வேனின் மூலம் இரவில் நடமாடுவதும் மக்களை பயமுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் தமக்கு கூடிய வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை அடுத்து, வவுனியாவில் உள்ள தூரஇடங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பாதுகாவலர்களும் ஆதரவாளர்களும் பயமுறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் இந்த சம்பவங்களை அடுத்து நேற்று இரவு 11 மணியளவில் பொதுமக்கள் பலர் வவுனியாவுக்கு வந்து நீதிவானிடம் முறையிட்டுள்ளனர்.

தமது முறைப்பாட்டை [...]

உலகில் முதன்முதலாக கணனி தொழில்நுட்பத்தால் வெற்றிகொண்ட இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்: மங்கள சமரவீர

ஜெனரல் சரத் பொன்சேகாவின் 1.5 மில்லியன் வாக்குகள் இறுதியில் மென்பொருள் தொழில்நுட்பத்தினால் முறைகேடாக மாற்றப்பட்டதன் மூலமே மஹிந்த ராஜபக்சவுக்கு 1.8 மில்லியன் வாக்குகள் மேலதிகமாக கிடைத்து அவர் வெற்றி பெற்றதாக சரத் பொன்சேகாவின் ஊடகப்பேச்சாளரான மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகில் முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட மென்பொருள் தொழில்நுட்ப வாக்குமோசடி இதுவென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் விரைவில் இந்த தேர்தல் மோசடி மிக்க தேர்தல் என்பதை உணர்ந்து கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ள அவர், 1933 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெர்மனியில் [...]

சுவிஸ் ஊடகவியலாளரின் விசாவை ரத்துச்செய்யும் தீர்மானம் மீளப்பெறப்பட்டுள்ளது

சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் விசாவை ரத்துச்செய்யும் நடவடிக்கையைஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீளப்பெற்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து செயற்படும் சுவிஸ் பொது வானொலியின் செய்தியாளர் கரின் வெங்கரின் வீசாவை இலங்கை அரசாங்கம் ரத்துச்செய்துள்ளது. இந்த நிலையில் அவரை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் திணைக்கள பணிப்பாளரின் உத்தரவின் படி குறித்த செய்தியாளருக்கான வீசா ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு கட்டுப்பாட்டாளர் பி பி அபயகோன் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கான காரணம் எதுவும் [...]

குடும்ப வாழ்க்கை இனி இல்லை: ஜெயிலில் இருந்து வந்ததும் சமூகசேவை செய்வேன்; நளினி சொல்கிறார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 19 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது.
இது குறித்து நளினியின் வக்கீல் துரைசாமி கூறியதாவது:-

நளினி ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் குடும்ப வாழ்க்கைக்கு செல்ல விரும்பவில்லை. சமூக சேவையில் ஈடுபட போவதாகவும், ஏழைகள் மற்றும் அடி மட்டத்தில் உள்ள பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட போவதாக என்னிடம் கூறினார்.

ராஜீவ் [...]

தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசனை

தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய திருத்தச் சட்ட மூலமொன்றை நிறைவேற்றிக் கொள்ளுமாறு சிரேஸ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய தேர்தல் முறைமையின் கீழ் நடாளுமன்றத் தேர்தலை நடாத்தினால் இலகுவாக அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது ஆளும் கட்சிக்கு சாதகமாக [...]

Next Page »