சரத் பொன்சேகாவின் அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைத்து தேடுதல்

ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் மற்றுமொரு அடியாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் 200 க்கு மேற்பட்ட விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் ரோயல் கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!