15 மணித்தியாலத்தில் சஜீவனின் அன்பளிப்பு (£ 16,958.92) கிடைக்கப்பெற்றுள்ளது
Posted by admin on February 13, 2010 · Leave a Comment
| |
17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி தமிழ்வின் ஊடாக அன்பளிப்பை கேட்டிருந்தார். |
| அவருடைய இரு கைகளின் சத்திரசிகிக்சைக்கான மொத்த நிதி இந்திய ரூபாய்ப்படி 12 இலட்சம் தேவைப்படும் என கேட்டிருந்த நிலையில் அவ் மொத்தநிதி 15 மணித்தியாலங்களில் பெரும் உள்ளம் கொண்ட மக்களால் உதவப்பட்டுள்ளது. லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் சேர்ந்து இந்த சேவையை செய்திருந்தது. ஏராளமான மக்கள் முன்வந்த பணவுதவிகளை செய்திருந்தனர். இச் சிறுவனுக்கு சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றோம். மற்றும் திரட்டப்பட்ட நிதி விபரங்கள் எவ்வாறு அப்பணம் அங்கு சஜீவனிடத்தில் ஒப்படைக்கபடுகிறது போன்ற விபரங்களை ஓர் சில நாட்களில் எமது இணையத்தளத்தினூடாக அறியத்தருவோம்.மற்றும் நாம் எமது இணையத்தளத்தில் பணம் செலுத்திய அனைவருடைய விபரங்கள் இணைத்துள்ளோம். விபரங்களில் ஏதாவது தவறு இருப்பின் எமது தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளவும். (தொலைபேசி எண்: 0041796357420)
மேலும் சேர்க்கப்பட்ட நிதியின் மொத்தத் தொகை கீழே விபரமாக தந்துள்ளோம்.
| திரட்டப்பட்ட நிதி |
£ 17, 861.50 |
| PayPal Transaction Fees |
£ 902.58 |
|