இல. இராணுவத்துக்கும், புலிகளுக்கும் ஒரே ஆயுத விற்பனை முகவர்!

இல. இராணுவத்துக்கும், புலிகளுக்கும் ஒரே ஆயுத விற்பனை முகவர்!
[ புதன்கிழமை, 26 மே 2010, 01:51.56 AM GMT +05:30 ]
இலங்கை இராணுவத்திற்கு தொடர்பாடல் உபகரணங்களை விற்பனை செய்த ஆயுத விற்பனை முகவர் ஒருவர் அதே வகையான பொருள்களை விடுதலைப்புலிகளுக்கும் விற்பனை செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முல்லைத்தீவு பிரதேசத்தில் படையினரின் தேடுதலில் குறித்த தொலைத்தொடர்பு உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு உபகரணங்களில் இராணுவத்தினருக்கு விற்பனை செய்த உபகரணங்களை தடை செய்யக் கூடிய மாற்று [...]
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம்!

பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய அடுத்த மாதம் அமெரிக்கா விஜயம்!
[ வியாழக்கிழமை, 27 மே 2010, 02:47.25 AM GMT +05:30 ]
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நாடு திரும்பியவுடன் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், கோத்தபாயவின் விஜயத்திற்கான காரணம் குறித்து எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா தொடர்பான கடுமையான பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்த அமெரிக்க குடியுரிமையுடைய கோத்தபாயவின் [...]
ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறிய பீரிஸ்

ஊடகவியலாளர் மாநாட்டிலிருந்து திடீரென வெளியேறிய பீரிஸ்
[ வியாழக்கிழமை, 27 மே 2010, 08:12.54 PM GMT +05:30 ]
அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் திடீரென வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சிக்கு அமைச்சர்கள் குழு விஜயம்

கிளிநொச்சிக்கு அமைச்சர்கள் குழு விஜயம்
[ புதன்கிழமை, 26 மே 2010, 11:10.41 AM GMT +05:30 ]
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அங்கு சென்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளது.
வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினருக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது, மாவட்டத்தின் போக்குவரத்து, கல்வி, வைத்தியம், மின்சாரம், மற்றும் [...]
மஹிந்த சிந்தனையின் உண்மை நிலைமை தற்போது வெளிப்படுகின்றது : ரணில்

மஹிந்த சிந்தனையின் உண்மை நிலைமை தற்போது வெளிப்படுகின்றது : ரணில்
[ வியாழக்கிழமை, 27 மே 2010, 05:24.00 AM GMT +05:30 ]
மஹிந்த சிந்தனையின் உண்மை நிலைமை தற்போது வெளிப்படுகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் எவ்வித பொருளாதாரக் கொள்கைகளும் இன்றி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசியாவின் ஆச்சரியமாக மற்றும் அரசாங்கத்தின் பிரச்சாரங்களின் உண்மைத்தன்மை தற்போது அம்பலமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் சேவைகளின் விலை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். [...]
தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருவரும் துரோகிகளே : பேராசிரியர் ராமசாமி

தமிழக முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருவரும் துரோகிகளே : பேராசிரியர் ராமசாமி
[ வியாழக்கிழமை, 27 மே 2010, 09:28.06 AM GMT +05:30 ]
தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பினாங் மாநிலத்திலுள்ள தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஈழத்தமிழர்கள் பற்றிக் கருத்துக் கூறுகையில் [...]
தென்னிந்திய தமிழ் திரையுலகினருக்கு பிரித்தானிய தமிழர் பேரவை பாராட்டு

தென்னிந்திய தமிழ் திரையுலகினருக்கு பிரித்தானிய தமிழர் பேரவை பாராட்டு
[ வெள்ளிக்கிழமை, 28 மே 2010, 10:47.49 AM GMT +05:30 ]
கொழும்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 4,5,6 ம் நாட்களில் நடைபெறவுள்ள பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற வகையில் ‘பிரித்தானிய தமிழர் பேரவை’ தனது உளமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கின்றது.
V.C. GUHANATHAN,President,Film Employees Federation of South India (FEFSI)No.30, Jawharlal [...]
புலிகளுக்கு ஆதரவாக பேசிய பினாங்கு முதல்வர் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரிக்கை

புலிகளுக்கு ஆதரவாக பேசிய பினாங்கு முதல்வர் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 28 மே 2010, 11:38.04 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்நாட்டு அரசாங்கத்திடம் இந்தியா கோரியுள்ளது.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற சீமானின் “நாம் தமிழர் அரசியல் மாநாட்டில்” கலந்து கொண்ட அவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு [...]
அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் செயலுக்கு இன்னர் சிற்றி பிரஸ் விளக்கம் கோரியுள்ளது
அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் செயலுக்கு இன்னர் சிற்றி பிரஸ் விளக்கம் கோரியுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 28 மே 2010, 07:46.09 AM GMT +05:30 ]
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பை புறக்கணித்தது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் விளக்கம் கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதிக்கப்பட்ட பத்திரிகையான இன்னர் சிற்றி பிரஸ், இலங்கை தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக்குற்றச் சாட்டுகளுக்கான விளக்கங்களையும் [...]
விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் உருவாகி வருகின்றனர் : இலங்கை அரசு

விடுதலைப்புலிகள் தமிழகத்தில் மீண்டும் உருவாகி வருகின்றனர் : இலங்கை அரசு
[ வெள்ளிக்கிழமை, 28 மே 2010, 08:41.11 AM GMT +05:30 ]
தமிழ் ஈழ கோரிக்கையை அடையும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் மீண்டும் உருவாகி வருவதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸை மேற்கோள் காட்டி, அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தமது கோரிக்கையை அடையும் பொருட்டு தமிழகத்தின் முக்கிய அரசியல் [...]