ஜனாதிபதி அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்

ஜனாதிபதி அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூன் 2010, 03:45.48 PM GMT +05:30 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸுடன் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஜி எல் பீரிஸ் அந்த நிகழ்வை பாதியில் முடித்துக்கொண்டு திரும்புகையில் தம்மை ஜனாதிபதி அவசரமான கூட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


எனினும் சந்திப்பின் நோக்கம் என்ன என்பது தொடர்பில் அவர் வெளியிடவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


ஐரோப்பிய ஒன்றியம், நிபந்தனையுடன் ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை நீடிப்பது தொடர்பாக இன்று அறிவித்தல் ஒன்றை விடுத்தமையும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் நிபுணர் குழு ஒன்றை அமைக்கப் போவதாக வெளியான தகவல் தொடர்பாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என அரசியல் தரப்புகள் தெரிவித்துள்ளன.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!