இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும்,
| இலங்கை அரசின் பகடைக்காய்களாக கே.பி.யும், டக்ளஸ் தேவானந்தாவும், |
| [ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 10:14.28 AM GMT +05:30 ] |
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். |
தடுப்பு முகாம்களில் உள்ள விடுதலைப்புலி போராளிகளையும் விடுவிக்கப்பட்ட சில அரசியல் பிரிவு போராளிகளையும் இணைத்து வடபகுதி அரசியலில் கே.பியை ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசு முனைப்புக்காட்டி வருவது டக்ளசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரியவருகிறது. கே.பி தரப்பு அரச ஆதரவுடன் வடக்கில் அரசியல் பிரவேசம் செய்தால் அது தமது இருப்பிற்கும் ஆபத்தாக அமைந்துவிடும் என டக்ளஸ் அஞ்சுவதால் தமிழ் உதிரிக்கட்சிகளான புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணி, ஆனந்தசங்கரி, ஈரோஸ், சிவாஜிலிங்கம் அணி என 7குழுக்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கும் தற்போது டக்ளஸ் முயற்சி எடுத்து வருகிறார். வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசாங்கத்துடன் ஆதரவுடன் முதலமைச்சருக்கான வேட்பாளராக களம் இறங்குவதற்கு டக்ளஸ் திட்டமிட்டிருந்த வேளையில் அரசாங்கம் கே.பியை முதலமைச்சருக்கான வேட்பாளராக நியமிக்கப் போவதாக அறிவித்திருப்பது டக்ளஸ் தேவானந்தாவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இதேவேளை கே.பியையும் டக்ளஸ் தேவானந்தாவையும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகடைக்காய்களாகவே பயன்படுத்தி வருகிறது. வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் டக்ளஸ் அணியையும், கே.பி அணியையும் தனித்தனியாக தேர்தலில் இறக்கி இரு தரப்பும் சேர்ந்து எடுக்கும் ஆசனத்தொகை தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட அதிகமாக இருந்தால் வடமாகாண சபையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்றும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. கே.பியுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் போராளி குடும்பங்களைச் சேர்ந்தோரை அரச தரப்பாக தேர்தலில் களமிறக்குவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு செல்லக்கூடிய வாக்குகளை தாங்கள் பெற முடியும் என்ற திட்டத்துடனும் அரசாங்கம் காய்நகர்த்தி வருகிறது. |
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவையும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பகடைக்காய்களாக பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.