அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ்
| அவுஸ்திரேலியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் இரத்தக்கறை படிந்தவர்கள் அல்லர் : கிளைவ் வில்லியம்ஸ் |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 06:14.22 AM GMT +05:30 ] |
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் தமிழ் மக்கள் அகதிகள் எனவும், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். |
தமிழர்கள் என்பதற்காக அவர்களை இலங்கை அரசாங்கமே பயங்கரவாதிகள் என காட்ட முற்படுவதாக பயங்கரவாத சம்பந்தமான நிபுணர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கை தமிழர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டு ஒன்று அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து த ஏட்ஜ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கிளைவ் வில்லியம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தின் பெரும் பகுதியை ஒரு காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இதன் போது அதிக அளவான மக்களும் அவர்களின் ஆளுகையிலேயே இருந்துள்ளனர். ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்தால் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களுள் சிலர் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் இணைந்திருந்தனர். அவர்கள் கொலை செய்திருக்கலாம். விடுதலைப்புலிகளின் செயல்பாடுகளில் பங்குபற்றி இருக்கலாம். ஆனால் அதே பகுதியில் வாழ்ந்த இன்னும் ஒரு தரப்பு மக்கள், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளில் பங்குகொள்ளாமல் சிறிய அளவிலான நிதியினை வழங்கி இருக்கலாம். அதுவும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதீத அழுத்தங்கள் காரணமாக அவர்கள் இந்த நிதி வழங்கலை மேற்கொண்டுள்ளனர் என்பதை, யாவரும் புரிந்துகொள்ள வேண்டும் என பேராசிரியர் வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார். இரத்தக்கறைகளுடனான தமிழர்களை அவுஸ்திரேலியாவுக்கு வர அனுமதிப்பதை தானும் எதிர்ப்பதாகவும், ஆனால் அவுஸ்திரேலியா வரும் 99 சதவீதமான தமிழர்கள் இரத்தக்கறை படிந்தவர்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். |
அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரும் தமிழ் மக்கள் அகதிகள் எனவும், அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.