நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையமும் பசில் ராஜபக்சவின் பொறுப்பில்
|
||
| நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையமும் பசில் ராஜபக்சவின் பொறுப்பில் | ||
| [ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 02:39.34 AM GMT +05:30 ] | ||
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலகண்ணி வெடிகளை அகற்றுவதற்காக தேசிய தொடர்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதுவும் வடமாகாண ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. |
||
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார். இந்த மாகாணங்களில் இதுவரை 2 லட்சத்து 68 ஆயிரம் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 860 மில்லியன் ரூபாவை செலவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் பல பிரதேசங்களில் நிலக்கண்ணி அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் சில தகவல்களின் படி, நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்ற நிதிகளை, இந்த மத்திய நிலையமே நிர்வகிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த மத்தியநிலையமும், வடமாகாண ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணத்தில் யுத்த காலத்தில் சுமார் 1.5 மில்லியன் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டதாக கணிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவற்றில் இதுவரை 268,000 கண்ணிகள் மாத்திரமே அகற்றப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
|
||
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலகண்ணி வெடிகளை அகற்றுவதற்காக தேசிய தொடர்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதுவும் வடமாகாண ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

