கற்பிட்டி குண்டு வெடிப்பில் ஒருவர் பலி

கற்பிட்டி குண்டு வெடிப்பில் ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 05:01.42 AM GMT +05:30 ]
கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகினார்.

32 வயதுடைய ஒருவரே நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


இவர் பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் உள்ள இலங்கை வான்படை பயிற்சி மைதானத்தில் வெடிக்காத நிலையில் இருந்த இந்த ஒரு அடி நீளமான குண்டை கண்டெடுத்துள்ளார்.


பின்னர் இதனை இளநீர் உரிப்பதற்கு முற்பட்டவேளையிலேயே இந்த வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவத்தின் போது காயமடைந்த மேலும் இருவர் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!