கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
| ஏனைய தொழிநுட்ப செய்தி |
| கோழியில் இருந்துதான் முட்டை வந்ததாம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு |
| [ வியாழக்கிழமை, 15 யூலை 2010, 03:57.07 பி.ப GMT ] |
இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி ஆய்வு நடத்தினார்கள். முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது.இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும்.அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று அடித்துக்கூறுகின்றனர் அந்த விஞ்ஞானிகள்! |