விமல் வீரவன்சவின் நாடகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடி : லக்ஸ்மன் கிரியெல்ல

விமல் வீரவன்சவின் நாடகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடி : லக்ஸ்மன் கிரியெல்ல
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 04:51.50 AM GMT +05:30 ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடாகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்சவின் நாடகத்தினால் ஆலோசனைக் குழுவின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மூவரடங்கிய ஆலோசனைக் குழுவிற்கு உதவி வழங்கும் நோக்கில் மேலும் ஏழு பேரை பான் கீ மூன் நியமித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி நிறைவேற்று பிரதமர் முறைமையை உருவாக்க வேண்டுமென மக்கள் கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதனை விடவும் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முனைப்பு காட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!