அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய குடும்பத்தினரை காணவில்லை
| அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை திரும்பிய குடும்பத்தினரை காணவில்லை |
| [ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 04:31.23 AM GMT +05:30 ] |
அவுஸ்திரேலியாவில் இருந்து 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வந்த குடும்பம் ஒன்றின் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெஹிவளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். |
காணாமல் போன லலிதமன்னா பெர்ணான்டோ என்பவர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியவர் என கூறப்படுகிறது. பின்னர் அவர் பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியாவில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தமது குடும்பத்துடன் கடந்த மார்ச் மாதம் இலங்கை வந்த நிலையில் தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்துள்ளார். எனினும் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் திகதி அங்கிருந்து வெளியேறிவிட்டதாக விடுதியின் காப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பின்னர் அவர்களை காணமுடியவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைபாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை நடத்துகின்றனர். |
அவுஸ்திரேலியாவில் இருந்து 15 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வந்த குடும்பம் ஒன்றின் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெஹிவளை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.