இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் புதியதொரு முறுகலை பிளேக் ஏற்படுத்தியுள்ளார்: வாசுதேவ நாணயக்கார

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையில் புதியதொரு முறுகலை பிளேக் ஏற்படுத்தியுள்ளார்: வாசுதேவ நாணயக்கார
[ வெள்ளிக்கிழமை, 23 யூலை 2010, 01:19.14 AM GMT +05:30 ]
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே புதியதொரு இராஜதந்திர முறுகல் நிலைமையை ரொபட் ஓ. பிளேக் ஏற்படுத்தியுள்ளார் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி.யும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எமது நாட்டில் சட்டங்கள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்களை சூசகமாக அவர் வெளியிட்டுள்ளார்.


இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெக்காவின் இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட கருத்து தொடர்பாக தெளிவுபடுத்துகையிலேயே வாசுதேவ நாணயக்கார எம்.பி. இதனைத் தெரிவித்தார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


பிளேக்கின் இலங்கை விஜயத்தை எதிர்க்கவில்லை. இவ்வாறு நாடு விட்டு நாடு செல்வது இராஜதந்திர ரீதியிலான அணுகுறையாகும். அத்தோடு விஜயம் செய்யும் நாடுகளின் உள் விவகாரங்கள் தொடர்பாக நன்கு ஆராய வேண்டும்.


அதேவேளை எமது நாட்டின் மனித உரிமைகள், ஜனநாயகம், ஊடகச் சுதந்திரம் உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் அதிகாரம் பிளேக்கிற்கு கிடையாது. சுதந்திரமான சுயாதிபத்தியம் கொண்ட நாடு இலங்கை. இதனை அவர் புந்து கொள்ள வேண்டும்.


எமது நாட்டுத் தலைவரோடு பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு ஒரு மணித்தியாலத்திற்குள் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறாகும்.


இதன் மூலம் எமது நாட்டில் மனித உரிமைகள், ஜனநாயகம் மதிக்கப்படுவதில்லை என்ற பிழையான கருத்தை உலகின் முன்பாக ஏற்படுத்த பிளேக் முனைந்துள்ளார். அத்தோடு இலங்கையின் அரசியலமைப்பில் இவை உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இவற்றை நடைமுறைப்படுத்துகின்றது.


பிளேக்கின் கருத்துக்கள் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் அத்தோடு மேற்குலக நாடுகளுக்குமிடையே புதியதொரு இராஜ தந்திர முறுகல் நிலைக்கு வித்திட்டுள்ளது.


ஐ.நா.வின் நிபுணர்கள் குழு அவருக்கு பிரச்சினையில்லாமல் இருக்கலாம். ஆனால் எமது நாட்டுக்கு அது பிரச்சினை மட்டும் அல்ல. உள்நாட்டு விடயங்களில் அத்து மீறி தலையிடும் செயலாகும் என்று கூறினார்.




Speak Your Mind

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!