கிளிநொச்சியில் 50 பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கினார் சிறிதரன் எம்.பி.

(2ம் இணைப்பு)
    கிளிநொச்சியில் 50 பாடசாலைகளுக்கு தொலைபேசிகளை வழங்கினார் சிறிதரன் எம்.பி.
    [ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 07:07.46 AM GMT +05:30 ]
    கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான தொலைத் தொடர்பு குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 52 CDMA தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

    தொலைபேசிகளை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் காலை 10 மணிக்கு இடம் பெற்றது

    வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளின் அதிபர்களிடம் CDMA தொலைபேசிகளை வழங்கியதுடன் பளை மற்றும் கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கான தொலைபேசிகளை கோட்டக்கல்வி அதிகாரிகளிடமும் வழங்கினார்.


    இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் என கல்விச் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கான கிளிநொச்சி கல்வி வலய அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் வரவேற்பு வைபவமாகவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குகம் சுகாதார முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேன் –  பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரை.

    கிளிநொச்சி கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கான 52 CDMA தொலைபேசிகளை வழங்கி வைத்து கிளிநொச்சி வலயக் கல்விப்பணிமனையில் கடந்த திங்கட்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சிறப்புரை ஆற்றினார்.

    கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமான பாடசாலைகள் ஏராளம் குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன. மாணவர்களும் ஆசிரியர்களும் இருக்க தளபாடங்கள் இன்றியும் வகுப்பறைகள் இன்றியும் ஆசிரியர் பற்றாக்குறைகளுடன் இருப்பதை அவதானித்துள்ளேன். மாணவர்கள் ஏராளம் மனச் சுமைகளுடன் கல்வியை தொடர்கின்றனர். எனவே அவர்களின் கல்வி வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டியிருக்கின்றது. அதற்காக நான் பாடுபடுவதை முதன்மை எண்ணமாகக் கொண்டுள்ளேன். என்று தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

    கல்விச் சமூகம் கல்வி தொடர்பான அக்கறையுடன் மட்டுமன்றி தாம் வாழ்கின்ற சமூகத்தின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் அக்கறை கொள்வதுடன் அவை தொடர்பான தீர்வுகளை நோக்கிய முன்னெடுப்புகளில் பங்காற்ற வேண்டுமென்றும் தெரிவித்தார் அபிவிருத்தி என்ற போர்வையில் எமது தமிழ்ச் சமூகத்தின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. அபிவிருத்தி என்ற மாயை பற்றியும் எல்லோரும் தெளிவாக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்த அவர் காலப்போக்கில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இப்போது நமது சமூகம் சிந்திக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

    கூரைகளின்றி தவிக்கும் பள்ளிகளும் பிள்ளைகளும் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா கவலை


    “கிளிநொச்சி வலயத்தில் இருக்கின்ற பெரும்பாலான பாடசாலைகளின் கட்டிடங்கள் முழுமையாக அழிவடைந்திருக்கின்ற அதேவேளை எஞ்சி இருக்கின்ற கட்டிடங்களின் பெரும்பாலானவை கூரைகளின்றி காணப்படுவதால் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலை தொடர்ந்தும் சீர்குலைவதாக தெரிவித்துள்ளார்.

    கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் 52 பாடசாலைகளுக்கு CDMA தொலைபேசிகள் வழங்கும் நிகழ்வில் தலைமையுரை ஆற்றும் போதே இதை தெரிவித்தார்.

    கிளிநொச்சி வலயத்தில் 22500 இற்கு மேற்பட்ட கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் 40 வீதமானவர்களுக்கு மட்டுமே தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேவேளை அதிகரித்துவரும் மாணவர் தொகைக்கு ஏற்ப 20க்கு மேற்பட்ட கீற்றுக் கொட்டகைகளை பாடசாலைகளில் உடன் வேய வேண்டிய தேவை இருப்பதாகவும் இக்குறைபாடுகள் உடன் தீர்க்கப்படாதவிடத்து எதிர்வரும் பருவமழை காலம் கல்வி செயற்பாடுகளை சீர்குலைக்குமென அச்சப்படுவதாகவும் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா கவலை வெளியிட்டார்.

    தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரனின் அன்பளிப்பில் தொலைபேசி குறைதீர்ந்த கிளிநொச்சியின் பாடசாலைகள் விபரம்: 

    பாடசாலை தொலைபேசி இலக்கம்

    கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி IAB கிளிநொச்சி - 213208201

    கிளி/கிளிநொச்சி இந்துக் கல்லூரி IAB கிளிநொச்சி  - 213208202

    கிளி/புனித திரேசா பெண்கள் கல்லூரி IAB கிளிநொச்சி  - 213208203

    கிளி/வட்டக்கச்சி ம.வி IAB வட்டக்கச்சி  - 213208204

    கிளி/முருகானந்தா ம.வி IAB முரசுமோட்டை - 213208205

    கிளி/முழங்காவில் ம.வி IAB முழங்காவில்  - 213208206

    கிளி/பூநகரி ம.வி IAB பூநகரி   - 213208207

    கிளி/பளை மத்திய கல்லூரி IAB பளை  - 213208208

    கிளி/இராமநாதபுரம் ம.வி IC இராமநாதபுரம்  - 213208209

    கிளி/அக்கராயன் ம.வி IC அக்கராயன்   - 213208210

    கிளி/உருத்திரபுரம் ம.வி IC உருத்திரபுரம்  - 213208211

    கிளி/திருவையாறு ம.வி IC திருவையாறு  - 213208212

    கிளி/கிளிநொச்சி ம.வி IC கிளிநொச்சி  - 213208213

    கிளி/கனகபுரம் ம.வி IC கிளிநொச்சி  - 213208214

    கிளி/பரந்தன் இந்து ம.வி IC பரந்தன்  - 213208215

    கிளி/கண்டாவளை ம.வி IC கண்டாவளை – 213208216

    கிளி/தர்மபுரம் ம.வி IC தருமபுரம்  - 213208217

    கிளி/பிரமந்தனாறு ம.வி IC பிரமந்தனாறு  - 213208218

    கிளி/வேரவில் இந்து ம.வி IC வேரவில் -  213208219

    கிளி/கறுக்காய்த்தீவு ம.வி IC பூகரி  - 213208220

    கிளி/பூநகரி நல்லார் ம.வி IC பூநகரி   - 213208221

    கிளி/வன்னேரிக்குளம் ம.வி II வன்னேரிக்குளம்  - 213208222

    கிளி/இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பா II வட்டக்கச்சி  - 213208223

    கிளி/புனித பற்றிமா றோ.க.த.க.பா II உருத்திரபுரம் - 213208224

    கிளி/கனகாம்பிகைக்குளம் அ.த.க.பா II கனகாம்பிகைக்குளம்  - 213208225

    கிளி/புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித் II உருத்திரபுரம்  - 213208226

    கிளி/புனித அந்தேனியார் றோ.க.த.க.பா II முரசுமோட்டை - 213208227

    கிளி/பாரதி வித்தியாலயம் II பாரதிபுரம்  - 213208228

    கிளி/சிவபாதகலையகம் அ.த.க.பா II கிளிநொச்சி - 213208229

    கிளி/ஐயனார்புரம் அ.த.க.பா II வன்னேரிக்குளம்  - 213208230

    கிளி/சிவநகர் அ.த.க.பா II உருத்திரபுரம்  - 213208231

    கிளி/அக்கராயன் அ.த.க.பா II கோணாவில்  - 213208232

    கிளி/இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பா II இராமநாதபுரம் – 213208233

    கிளி/கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித் II புளியம்பொக்கனை - 213208234

    கிளி/புன்னைநீராவி அ.த.க.பா II தருமபுரம்  - 213208235

    கிளி/இரணைதீவு றோ.க.த.பா II இரணைதீவு  - 213208236

    கிளி/நாச்சிக்குடா அ.த.க.பா II நாச்சிக்குடா - 213208237

    கிளி/செல்லியாதீவு அ.த.க.பா II பூநகரி - 213208238

    கிளி/ஜெயபுரம் ம.வி II ஜெயபுரம்  - 213208239

    கிளி/முக்கொம்பன் அ.த.க.பா II பூநகரி   - 213208240

    கிளி/மாசார் அ.த.க.பா II பளை   - 213208241

    கிளி/பளை றோ.க.த.க.பா II பளை  - 213208242

    கிளி/சோரன்பற்று கணேசா வித்தி II பளை  - 213208243

    கிளி/கண்ணகைஅம்மன் வித்தி II தட்டுவன்கொட்டி  - 213208244

    கிளி/தமிழ்ச்சோலை வித்தி II மலையாளபுரம்  - 213208245

    கிளி/கிராஞ்சி அ.த.க.பா II கிராஞ்சி  - 213208246

    கிளி/பூநகரி ஸ்ரீ விக்கினேஸ்வரா வித்தி II பூநகரி - 213208247

    கிளி/கல்லாறு தமிழ் வித்தி II தருமபுரம்  - 213208248

    கிளி/இயக்கச்சி அ.த.க.பா II இயக்கச்சி  - 213208249

    கிளி/ஊற்றுப்புலம் அ.த.க.பா II கோணாவில்  - 213208250

    கோட்டக்கல்வி அலுவலகம் – பளை II பளை  - 213208251

    கோட்டக்கல்வி அலுவலகம்- கண்டாவளை II கண்டாவளை – 213208252







    Speak Your Mind

    Tell us what you're thinking...
    and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!