முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!

    முன்னாள் போராளிகளெனக் கூறி கைதான பலர் எங்குள்ளனர் என்று தெரியவில்லை! குடும்பத்தினர் சிறைச்சாலைகள், தடுப்புமுகாம்களிற்கு அலையும் அவலம்!!
    [ சனிக்கிழமை, 24 யூலை 2010, 10:36.10 AM GMT +05:30 ]
    போருக்குப் பின்னர் முன்னாள் போராளிகளெனக் கூறி கைதுசெய்யப்பட்ட பலர் எங்குள்ளனர் என்று தெரியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் சிறைகளிற்கும் தடுப்பு முகாம்களிற்கும் அலைந்து திரிகின்றனர்;.


    2009ம் ஆண்டு யுத்தம் முடிந்தபின்னர் புலிகளுடன் தொடர்பு பட்டவர்களும் போராளிகளும் கைதுசெய்யப்பட்டனர். அவ்வாறு ஓமந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்ப்ட்ட பலர் இன்று வெளிப்படையாக இயங்கும் தடுப்பு முகாம்களிலோ சிறைகளிலோ இல்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.


    அவ்வாறு தமது பிள்ளைகள் மற்றும் கணவன் எங்கே என்று தேடி அலைவோர் தொகை கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கணிசமாகவுள்ளது. இவர்களில் இருவரை கிளிநொச்சியில் சந்தித்தபோது.


    ““என்னுடைய பெயர் குகேந்திரன். சிவகோகிலா. கணவர் 5வருடம் புலிகள் அமைப்பில் இருந்தவர். யுத்தத்தின் பின்னர் ஓமந்தையில் வைத்து இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். முதலில் விசாரணைக்கென்றே கூறினர். பின்னர் அவர் பற்றிய தகவல்கள் எவையும் எமக்குக் கிடைக்கவில்லை.


    எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இராணுவம் அழைத்துச்சென்ற போது 2 கால்களிலும் காயமடைந்திருந்தார். சகல இடங்களிலும் தேடிப்பார்த்தோம். எங்கும் அவர் இல்லை. இராணுவத்திடம் கேட்டால் அவர் இருக்கிறார் விசாரணைகள் முடிவடைய வில்லை எனக்கூறுகின்றனர். ஆனால் எங்கிருக்கிறார் போன்ற தகவல்களைத் தர மறுத்து விட்டனர்” என கூறுகிறார்.



    இன்னொரு தாய் இவ்வாறு கூறுகின்றார்.


    “என்னுடை பிள்ளையின் பெயர் கதாநாயகி வயது 20. ஒரு மாதம் இயக்கத்தில் இருந்தார். அதுவும் கட்டாயத்தின் பெயரில். பச்சைப்புல்மோட்டையில் நடந்த சண்டையில் என்னுடைய மகளுடன் சேர்த்து 12 பேரை இராணுவம் பிடித்துச் சென்றதாக இயக்கம் கூறியது.


    மூன்று மாதத்திற்கு முன்னர் மன்னார் வைத்தியசாலைக்கு எனது மகள் இராணுவத்தால் கூட்டி வரப்பட்டதாக உறவினர்கள் உறுதியாக கூறுகின்றனர். எனினும் அங்கு சென்று பார்த்த போது எந்தத் தகவல்களும் இல்லை. பல இடங்களிற்கும் சென்று பார்த்து விட்டோம். எனினும் எந்தத் தகவல்களும் இல்லை என்றார்.”


    இவ்வாறான நிலைமை மேற்படி மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றது. இதேவேளை முன்னாள் போராளிகள் பலர் இரகசியமான இடங்களில் வைத்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக சில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

    Speak Your Mind

    Tell us what you're thinking...
    and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!