ரொபட் பிளக்கின் கருத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்
|
||
| ரொபட் பிளக்கின் கருத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் | ||
| [ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 06:16.16 PM GMT +05:30 ] | ||
இலங்கை தொடர்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான ஐக்கிய அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் விடுத்திருந்த கருத்துக்கு அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. |
||
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ரொபர்ட் பிளக் இலங்கையின் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றோ அல்லது 17ம் திருத்தச் சட்டம் தொடர்பிலோ எவ்வாறு கருத்துரைக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ரொபர்ட் ஓ பிளக் இலங்கையில் பணியாற்றுகின்ற ஒரு அமெரிக்கர். ஆகவே அவர் ஒரு வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் அவருக்கு உள்வீட்டு செயற்பாடுகளில் தலையிட உரிமை இல்லை என கெஹெலிய தெரிவித்துள்ளார். 17 வது திருத்தச்சட்டம் என்பது இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட விடயமாகும். இதனைபற்றி பேசுவது முழுமையாக உள்விவகாரங்களில் தலையிடுவதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டவர் ஒருவர் இலங்கைக்கு வந்து ஊடக மாநாட்டை நடத்தும் அளவிற்கு இலங்கையில் ஜனநாயக மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளதாகவும் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
|
||
இலங்கை தொடர்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான ஐக்கிய அமெரிக்க இராஜாங்க உதவி செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் விடுத்திருந்த கருத்துக்கு அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.