ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு
|
||
| ரொபேட் ஓ பிளேக், மஹிந்த ராஜபக்ச சந்திப்பு: நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபட் ஓ பிளேக் தெரிவிப்பு | ||
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 08:30.53 AM GMT +05:30 ] | ||
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. |
||
ரொபேட் பிளேக் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான கலந்துரையாடல் ஒரு மணித்தியாலம் வரை நீடித்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை விரிவாக்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இலங்கை வந்த அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் பிற்பகல் வேளையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். ஒருநாள் பயணமாக இலங்கை வந்த அவர் அடுத்ததாக மாலைதீவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். நல்லிணக்கம் மூலமே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என ரொபேட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இன்று மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸை சந்தித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த அவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வர்த்தக சமூகத்தினர் மற்றும் சிவில் சமூக குழுக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை, இன்று மாலை அவர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார் இதன்போது கருத்து வெளியிட்ட அவர்… நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மற்றுமொரு முக்கியமான விடயமாக கடந்தகால தவறுகளுக்கு பொறுப்பு ஏற்கப்படுதலை குறிப்பிட்டுள்ள ரொபேர்ட் பிளேக் அவர்கள், இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலருக்கு இலங்கை மனித உரிமைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட ஆலோசனைக்குழுவும் நல்ல பலனைத்தரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக்குழு ஐ. நா செயலாளரால் நியமிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றும் அதுமாத்திரமன்றி, அது ஐநா செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழு மாத்திரந்தான் என்பதுடன் அதற்கு புலன் விசாரணை செய்யும் பங்கோ நீதித்துறைப் பங்கோ கிடையாது என்றும் பிளேக் கூறினார். இது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இறுதி தீர்வை காண்பதற்கும், எதிர்கால நல்லிணக்கத்திற்கும் உதவும் என அமெரிக்கா நம்புவதாக ரொபேட் ஓ பிளேக் குறிப்பிட்டர்ர்.; சமாதானத்திற்கு நல்லிணக்கமே முதல் படியாகும். இந்தநிலையில், இடம்பெயர்ந்தோர் மீள் திருப்பலுக்கும் கண்ணிவெடியகற்றலுக்கும் அமெரிக்கா தொடர்ந்தும் உதவியளிக்கும். அத்துடன் மீள குடியமர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கும் வடக்கில் முதலீடுகளுக்கும் அமெரிக்கா தமது ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்;. கடந்த 2 வருடங்களில் மாத்திரம் அமெரிக்கா இலங்கைக்கு 142 மில்லியன் டொலர்களை மனிதாபிமான உதவியாக வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இடம்பெயர்ந்தோரை மீள குடியமர்த்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. இதனை அமெரிக்கா வரவேற்கிறது. வர்த்தக சமூகத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடத்திய போது, குறிப்பாக வடக்கில் மீன்பிடித்துறை, வங்கி மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. அமெரிக்காவை பொறுத்தவரையில் இதற்கு ஊக்கமளிப்பதாக தயார் என ரொபேட் பிளேக் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு தொடர்பில் இலங்கையில் தப்பான அபிப்பிராயம் நிலவுகிறது. எனினும் அது பான் கீமூனுக்கு ஆலோசனை வழங்க மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அவர், இந்தக்குழுவின் அனுபவங்கள் இலங்கையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கும் உதவும் என தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கைக்கும் இடையிலான பிரச்சினை தீர்க்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை, இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கம் மற்றும் 17 வது அரசியலமைப்புச் சீர்திருத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நல்லிணக்கம், ஊடக சுதந்திரம், சமாதானம் மற்றும் மனிதவுரிமைகளை காப்பாற்ற முடியும் என அமெரிக்கா கருதுவதாக ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
|
||
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளக் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. 