வன்னிக்குச் சென்ற நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
| வன்னிக்குச் சென்ற நோர்வே ஊடகவியலாளர் மாயமானது குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை |
| [ புதன்கிழமை, 21 யூலை 2010, 04:45.37 AM GMT +05:30 ] |
வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
வன்னிக்குச் சென்று திரும்பிய பெரீன் ரக்கோ என்ற பெண் ஊடகவியலாளர் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குறித்த ஊடகவியலாளர்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் ஊடகவியலாளருக்கும் நோர்வே புலிகள் அமைப்பிற்கும் தொடர்பு இருப்பதாக திவயின பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. நோர்வேயின் என்.ஆர்.கே வானொலிச் சேவைக்காக கடமையாற்றிய பெண் ஊடகவியலாளரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுற்றுலாப் பயணி ஒருவரைப் போன்று குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறி குறித்த பெண் ஊடகவியலாளர் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
வன்னிக்குச் சென்று திரும்பிய நோர்வே ஊடகவியலாளர் மாயாமானது தொடர்பில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.