அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொதுச்சந்தைப்பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் திடீர் சோதனையை நடத்திய களுவாஞ்சிகுடி பொலிஸார் பெருமளவான பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய அவின்களை கைப்பற்றியுள்ளதுடன் மூன்று முஸ்லிம் வர்த்தகர்களையும் கைதுசெய்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை பிற்பகல்5.00மணியளவில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த அவின்களை கைப்பற்றியுள்ளனர்.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் எடிசன் குணவர்த்தனமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம்.கருணாரட்னகளுவாஞ்சிகுடி பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் விஜயபால ஆகியோரின் ஆகியோரின் பணிப்புரைக்கமைய களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தலைமையிலான பொலிஸ் குழவினர் இந்த தேடுதலை மேற்கொண்டனர்.
கல்முனை நகரில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீவிர தேடுதல் நடத்திய பொலிஸார் இதன்போது இரு வர்த்தக நிலையங்களில் இருந்து பெரிய பரல்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 248 பெட்டிகளி மறைத்துவைக்கப்பட்டிருந்த சுமார் 5500 பக்கட் பாலியல் உணர்வுகளை தூண்டக்கூடிய “மன்மத லேகியம்”என்னும் வகையிலான அவினை கைப்பற்றியதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடு தெரிவித்தார்.
இதன் கைப்பற்றப்பட்ட அபின் பைக்கற்றுகளின் பெறுமதி சுமார் 137500 ரூபா எனவும் அவர் தெரிவித்ததுடன் இது தொடர்பில் மூன்று முஸ்லிம் வர்த்தகர்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுஇன்னும் பல்வேறு இடங்களில் இவை விற்பனைசெய்யப்பட்டுவருவதாகவும் அவற்றினையும் கண்டுபிடிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.