ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க
| ஜனநாயகத்திற்கு முரணான வகையில் மாணவர் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்: ஐ.தே.க |
| [ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 03:42.50 PM GMT +05:30 ] |
ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. |
மாணவர் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாயலமான சிறிகொத்தவில் கட்சி உறுப்பினர்களை சந்தித்து திரும்பிய போது உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளார். உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்ட விதம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை தைரியமாக எதிர்க்கும் அனைவருக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கு காணப்படும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இளைஞர் பிரச்சினைகள் நெகிழ்வுத் தன்மையுடன் அணுகப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட உதுல் பிரேமரட்ன கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. |
ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன கைது செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.