தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை முதல் தடவையாக இந்தியா ஏற்றுள்ளது! குற்றச்சாட்டுக்களும் நீக்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை முதல் தடவையாக இந்தியா ஏற்றுள்ளது! குற்றச்சாட்டுக்களும் நீக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:21.08 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை இந்தியா முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியான பிரபாகரன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான பொட்டம்மான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையில் [...]

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு! மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி

(2ம் இணைப்பு)

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு! மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி
[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:18.07 AM GMT +05:30 ]
ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
இந்த வெற்றி நிகழ்வில் ரொப் போட் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மாலையணிவித்து [...]

சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளனர்: த.ம.வி.பு. கட்சி

சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளனர்: த.ம.வி.பு. கட்சி
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 02:03.50 AM GMT +05:30 ]
சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.  கட்சியின் பொதுச் செயலளார் தைலேஸ்வரராஜா இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகளில் புலனாய்வுப் பிரிவினரும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீன புலனாய்வுப் பிரிவினரின் ஊடுருவல் தொடர்பில் மக்கள் தமக்கு தெரியப்படுத்தியதாக அவர் [...]

யாழ். நகரில் இந்திய புடவை வியாபாரிகள் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல்

யாழ். நகரில் இந்திய புடவை வியாபாரிகள் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல்
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:49.55 AM GMT +05:30 ]
சுற்றுலா பயண அனுமதியுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய புடவை வியாபாரிகள் நேற்று புதன்கிழமை வாகனத்தில் வந்த புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
நேற்று புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ் நகரிலுள்ள விடுதிகளுக்ககுச் சென்ற புலனாய்வுப் பிரிவினர் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களை கடத்தியதுடன் அவர்களது கடவுச் சீட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுவரை [...]

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 01:49.58 PM GMT +05:30 ]
இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்துக்கொண்டு சென்ற ஒன்றரைக் கோடி (இந்திய ரூபா) பெறுமதியான  2 ஆயிரத்து 65 நவரத்தினக் கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்து [...]

சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல்: பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை

சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல்: பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 06:56.17 AM GMT +05:30 ]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த [...]

புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதனுக்கு சர்வதேச பிடிவிராந்து

புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதனுக்கு சர்வதேச பிடிவிராந்து
[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 01:40.54 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதன் எனப்படும் பிருந்தவன் சிவராசா என்பவருக்கு சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த நபரை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறையினரால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கடவுச் சீட்டை உடைய அச்சுதன் பிரான்ஸில் விமானப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
58 ஆவது [...]

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:58.16 PM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
‘சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு)  தீர்ப்பாயத்தின் [...]

தெகிவளையில் தமிழ் பெண்ணொருவரை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது

தெகிவளையில் தமிழ் பெண்ணொருவரை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 06:04.06 AM GMT +05:30 ]
தெகிவளை பீற்றர்ஸ் ஒழுங்கையில் நேற்று இரவு ஹற்றன் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தமிழ் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
WP KI-0009 இலக்கமுடைய காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இவர் கடத்தப்படுவதை பார்த்த சில தமிழ் இளைஞர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றபோது காரில் வந்தவர்கள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளையும் இடித்துத் [...]

பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்

(2ம் இணைப்பு)

பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்
[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 07:18.07 PM GMT +05:30 ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை [...]

Next Page »