Daily Tamil » சிறப்புச் செய்திகள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை முதல் தடவையாக இந்தியா ஏற்றுள்ளது! குற்றச்சாட்டுக்களும் நீக்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தை முதல் தடவையாக இந்தியா ஏற்றுள்ளது! குற்றச்சாட்டுக்களும் நீக்கம்

[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:21.08 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை இந்தியா முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியான பிரபாகரன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான பொட்டம்மான் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு விசாரணையில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய புலனாய்வு பிரிவான சிபிஐ யின் தகவலின் அடிப்படையிலேயே இந்த தீர்மானத்தை இந்திய சிறப்பு நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முதலாவது குற்றவாளியான பிரபாகரன் மற்றும் இரண்டாவது குற்றவாளியான பொட்டம்மான் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக நீதிபதி தக்சினாமூர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் கொலைக்கு பின்னர் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய சிபிஐயின் பல்ஒழுங்காற்று கண்காணிப்பு மையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படியே நீதிபதி இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.

இந்திய சட்டத்தின்படி குற்றவாளிகளின் இறப்புகளுக்கு பின்னர் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் போகும் ஏற்பாடு உள்ளது.

இதேவேளை 1989 ஆண்டு கொழும்பில் வைத்து கொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கொலை வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கைப் பொலிஸார் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக அறிக்கை சமர்ப்பித்திருந்தமையை டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு! மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி
(2ம் இணைப்பு)

ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு! மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி

[ செவ்வாய்க்கிழமை, 26 ஒக்ரோபர் 2010, 05:18.07 AM GMT +05:30 ]

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி நிகழ்வில் ரொப் போட் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டக் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மாலையணிவித்து பராட்டப்பட்டிருந்தார்.

இந் நிகழ்வு ஆரம்பத்தில் இடம்பெற்றாலும் ரொப் போட் தனது வெற்றியுரை முடியும் வரை மாலையணிந்தவாறே தோன்றியிருந்தார். இது சகல ஊடகங்களாலும் பிரபல்யப்படுத்தி ஒளிபரப்பட்டது.

இதேவேளை கவுன்சிலர் பதவிக்கான தமிழ் வேட்பாளர்களில் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதப்பட்ட நீதன் சாண் என்பவர் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லை. இவர் ரொறன்ரோ ஸ்ரார், குளோப் அன்ட் மெயில் ஆகிய இரு பத்திரிகைகளினால் பரிந்துரைக்கப்பட்டவராக இருந்த போதிலும் 19 வருடங்களாக அப் பிரதேச கவுன்சிலராக இருக்கும் றேமன்ட் சோ என்பவர் இந்த முறையும் இலகுவாக வெற்றிக் கணியைத் தட்டிக் கொண்டார்.

இன்னொரு வேட்பாளரான பார்த்தி கந்தவேல் என்பவர் வெற்றிபெற்றவருக்கு மிக நெருக்கமான போட்டியை கொடுத்த ஒரு வேட்பாளராக காணப்பட்டார்.

அதே போன்று அஸ்வின் பாலசுப்பிரமணியம் என்ற வேட்பாளரும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தார்.

நமு பொன்னம்பலம், ரோய் விக்னராஜா, ரோஜ் ரட்ணவேல், வேந்தன் ராமநாத வவுனியன் போன்ற வேட்பாளர்களும் இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க போட்டியை வெற்றி பெற்றவர்களிற்குக் கொடுத்து தோல்வியைத் தழுவியிருந்தார்கள்.

ரொப் போட் அவர்களின் பிரச்சாரப் பணிகளிற்கான குழுவாக பணியாற்றிய சாம்; அசோகன், சிறினிவாசன், சுரேன் சிவா, ரேவதி சாமிநாதன் ஆகியோரது அணிகளின் முயற்சியால் ரொப் போட் அவர்களின் முகாமை தமிழர்கள் சார்பாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றதையிட்டு ரொறன்ரோ மக்கள் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!

கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர்.

இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார்.

கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார்.

இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார்.

ரொப் போட்

யுவனிதா நாதன்

சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளனர்: த.ம.வி.பு. கட்சி
சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளனர்: த.ம.வி.பு. கட்சி

[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 02:03.50 AM GMT +05:30 ]

சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.  கட்சியின் பொதுச் செயலளார் தைலேஸ்வரராஜா இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகளில் புலனாய்வுப் பிரிவினரும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீன புலனாய்வுப் பிரிவினரின் ஊடுருவல் தொடர்பில் மக்கள் தமக்கு தெரியப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, சீன புலனாய்வுப் பிரிவினர் கிழக்கில் ஊடுருவியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சிலர் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

கிழக்கு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ள சீன அதிகாரிகள் மிகவும் கிரமமான முறையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன அதிகாரிகளின் நேர்த்தியான செயற்பாட்டை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். நகரில் இந்திய புடவை வியாபாரிகள் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல்
யாழ். நகரில் இந்திய புடவை வியாபாரிகள் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தல்

[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:49.55 AM GMT +05:30 ]

சுற்றுலா பயண அனுமதியுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட இந்திய புடவை வியாபாரிகள் நேற்று புதன்கிழமை வாகனத்தில் வந்த புலனாய்வுப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

நேற்று புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு யாழ் நகரிலுள்ள விடுதிகளுக்ககுச் சென்ற புலனாய்வுப் பிரிவினர் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்களை கடத்தியதுடன் அவர்களது கடவுச் சீட்டுக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுவரை காலமும் சுற்றுலா பயண அனுமதி முடிவடைந்த பின் வியாபாரம் செய்பவர்களை பொலிசாரே கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

எனினும் இன்றைய கடத்தல் சம்பவம் புலனாய்வுப் பிரிவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்
சென்னையில் இலங்கை வாலிபரின் வயிற்றிற்குள் ரூ.1 1/2 கோடி பெறுமதியான நவரத்தினக் கற்கள்

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 01:49.58 PM GMT +05:30 ]

இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் இலங்கை வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்துக்கொண்டு சென்ற ஒன்றரைக் கோடி (இந்திய ரூபா) பெறுமதியான  2 ஆயிரத்து 65 நவரத்தினக் கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் வாலிபர் ஒருவர் வயிற்றில் மறைத்து வைத்து நவரத்தின கற்களை கடத்தி வருவதாக புறநகர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

கடத்தல் ஆசாமியை பிடிப்பதற்காக பொலிஸாரின் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படைகள் தீவிரமாக கண்காணித்தபோது விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த முகமது ஷபி (41)  என்பவரை பிடித்தனர்.

இலங்கையை சேர்ந்த இவர்தான் நவரத்தின கற்களை கடத்தி வந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஷபியை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற பொலிஸார் அவரது வயிற்றை ஸ்கான் செய்து பார்த்தனர். வயிற்றுக்குள் 48 நிரோத் பாக்கெட்டுகளில் 2 ஆயிரத்து 65 நவரத்தின கற்கள் இருந்தன.

இதனை வெளியில் கொண்டுவர பொலிஸார் முயற்சி மேற்கொண்டனர். இனிமா, வாழைப்பழம் போன்றவை அவருக்கு கொடுக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்த பின்னர் வயிற்றில் இருந்த ரூ.1 1/2 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் வெளியில் வந்தன.

இதனை கைப்பற்றிய பொலிஸார் விமான நிலைய சுங்கத்துறையினரிடம் இதனை ஒப்படைக்க உள்ளனர்.

ஒருமுறை இப்படி கடத்தலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் கமிஷன் கிடைக்கும் என்று ஷபி பொலிஸாரிடம் கூறியுள்ளார். இதற்கு முன்பு 2 முறை இதேபோல கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஷபி கடத்திவரும் பொருட்களை மண்ணடி லாட்ஜில் வைத்து குமார், சபீர், ரபீக் ஆகிய 3 பேர் வாங்கிச் சென்றுள்ளனர். இவர்கள் யார், பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் பொலிஸார் விசாரித்து வருகிறார்கள்.

சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல்: பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை
சந்திரிகா மீதான தற்கொலை தாக்குதல்: பிரதான குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 06:56.17 AM GMT +05:30 ]

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ய முயற்சி செய்த பிரதான குற்றவாளி என இனங்காணப்பட்டவருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இலங்கேஸ்வரன் என்பவருக்கே 30 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி டப்ளியூ.ரி.எம்.பி.டி. வராவௌ, வழங்கினார்.

சம்பவத்தின் போது தற்கொலை குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணம் சம்பவத்திருக்குமானால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருக்கும். இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதிபதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார்.

அத்துடன், கொலைமுயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொள்ள செய்தமையைக் கொண்டே குற்றவாளிக்கு இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதனுக்கு சர்வதேச பிடிவிராந்து
புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதனுக்கு சர்வதேச பிடிவிராந்து

[ புதன்கிழமை, 27 ஒக்ரோபர் 2010, 01:40.54 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அச்சுதன் எனப்படும் பிருந்தவன் சிவராசா என்பவருக்கு சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபரை கைது செய்வதற்காக சர்வதேச காவல்துறையினரால் இந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் கடவுச் சீட்டை உடைய அச்சுதன் பிரான்ஸில் விமானப் பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

58 ஆவது படையணியினரால் விஸ்வமடு பிரதேசத்தில் மீட்கப்பட்ட இரகசிய ஆவணங்களின் மூலம் அச்சுதன் தொடர்பான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள், பங்களாதேஷ் நிறுவனமொன்றிடம் விமானங்களை கொள்வனவு செய்து இன்தோனேஷியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை
புலிகள் மீதான தடை நீட்டிப்பு: அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை

[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 01:58.16 PM GMT +05:30 ]

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு குறித்து, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் அமர்வுக் கூட்டம் சென்னையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசுத் தரப்பு சாட்சியாக ஆஜரான காவல் அதிகாரிகளிடம் வைகோ குறுக்கு விசாரணை செய்தார்.

இதுதொடர்பாக ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

‘சென்னையில் பயங்கரவாத நடவடிக்கைகள் (தடுப்பு)  தீர்ப்பாயத்தின் நீதிபதி விக்ரம் ஜித் சென் முன்னிலையில் இன்று காலை 10.30 மணி அளவில் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்காக வைகோ, பழ.நெடுமாறன், வழக்கறிஞர்கள் தேவதாஸ், சந்திரசேகர் ஆகியோர் தீர்ப்பாயத்திற்கு வந்தனர்.

அரசுத் தரப்பு சார்பில் சிவகங்கை மாவட்ட கியூ பிராஞ்ச் ஆய்வாளர் சந்திரசேகரன், கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) இளங்கோவன், தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், சென்னை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் முகமது அஸ்ரப் மற்றும் திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் தங்கவேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

சாட்சி சந்திரசேகரனிடம் வைகோ,

”சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 10 (a) (1) கீழ் யார் மீதாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டின்மீது வழக்கு பதிவு செய்துள்ளீர்களா?” என்று கேட்டார்.

அப்படி எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சந்திரசேகரன் கூறினார்.

தூத்துக்குடி கியூ பிராஞ்ச் ஆய்வாளர் பாஸ்கரன், நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

அப்போது வழக்கறிஞர் சந்திரசேகர், உயர் நீதிமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்றும் அப்பேச்சின் தொடர்ச்சியாக குற்றச் செயல்கள் ஏதேனும் நடந்திருந்தால்தான் குற்றமாகும் என்றும் தெரிவித்து சீமான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்து அது சாட்சிக்குத் தெரியுமா என்று கேட்டார்.

அப்போது வைகோ எழுந்து, “மற்றொரு பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக சீமான் கைது செய்யப்பட்டு தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளார்,” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்தார்,’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெகிவளையில் தமிழ் பெண்ணொருவரை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது
தெகிவளையில் தமிழ் பெண்ணொருவரை கடத்தும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது

[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 06:04.06 AM GMT +05:30 ]

தெகிவளை பீற்றர்ஸ் ஒழுங்கையில் நேற்று இரவு ஹற்றன் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தமிழ் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

WP KI-0009 இலக்கமுடைய காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இவர் கடத்தப்படுவதை பார்த்த சில தமிழ் இளைஞர்கள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றபோது காரில் வந்தவர்கள் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளையும் இடித்துத் தள்ளிவிட்டு அந்த பெண்ணையும் கடத்திக் கொண்டு சென்று விட்டார்கள்.

இவர்கள்  வந்த காரின் இலக்கத்தை குறிப்பதை அறிந்த கடத்தல்காரர்கள் தமது காரையும் அப் பெண்ணையும் ஏதோ ஒரு கார்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஒழித்துக் கொண்டார்கள்.

அச்சமயத்தில் காரின் கதவு பூட்டப்படாததை அறிந்த அப்பெண் வேகமாக காரில் இருந்து இறங்கி ஒரு பள்ளத்தில் ஒழித்துக் கொண்டார். கடத்தல்காரர்கள் அப்பெண்ணை தேடிய போதும் பிடிக்கமுடியாததால் அவ்விடத்திலிருந்து விலகிச்சென்றுள்ளனர்.

தனது வீடு நோக்கி தப்பிவந்த அப்பெண் அங்கு நின்ற தமிழ் இளைஞர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.

தன்னைக் கடத்தியவர்கள் முஸ்லிம் இளைஞர்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் பேசிய தமிழ் அவ்வாறே காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

உடனடியாக 119 என்ற பொலிஸ் பிரிவுக்கு தெரிவித்து கார் இலக்கத்தையும் பொலிசாருக்கு கொடுத்தபோதும் அவர்கள் இன்னமும் அந்த கடத்தல்காரர்களை கைது செய்யவில்லை. என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்
(2ம் இணைப்பு)

பிரான்சில் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை – பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன்

[ வியாழக்கிழமை, 28 ஒக்ரோபர் 2010, 07:18.07 PM GMT +05:30 ]

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை.

இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அமைச்சரவையின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். நாம் இந்தவார இறுதிக்குள் அமைச்சரவையை அறிவிக்கவுள்ளோம். அதுவரையிலான இடைக்காலத்துக்கு பிரதமர் அலுவலகம்தான் இவ்விடயங்களைக் கவனித்து வருகிறது.

எமது அமைச்சரவை இயங்கத் தொடங்கியதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருபினர்களுக்காக செயற்பாட்டு நடைமுறையொன்றினை (code of conduct ) உருவாக்கவுள்ளோம். மக்களவை உட்பட ஏனைய பொது அமைப்புக்களோடு இணைந்து செயற்படும் விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆராய்ந்து முடிவு செய்யவுள்ளோம் என பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Secretariat TGTE
secretariat@tgte.org