யாழில் இருந்து கொழும்பு சென்ற வான் சிலாபத்தில் விபத்து: இருவர் பலி! 7 பேர் காயம்

யாழில் இருந்து கொழும்பு சென்ற வான் சிலாபத்தில் விபத்து: இருவர் பலி! 7 பேர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 14 செப்ரெம்பர் 2010, 02:01.33 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த வான் சிறைச்சாலை பஸ்வண்டியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் சிலாபம், மாரவில பகுதியில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
கமலராசன் சந்தோஷ் (வயது 5), மாணிக்கம் தம்புலிங்கம் [...]

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பியிருக்கவில்லை: கோத்தபாய செவ்வி

(2ம் இணைப்பு)

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பியிருக்கவில்லை: கோத்தபாய செவ்வி
[ வெள்ளிக்கிழமை, 17 செப்ரெம்பர் 2010, 02:48.07 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் சரணடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவின் “த ஏசியன் ஏஜ்’ (The Asian Age) பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பியிருக்கவில்லை. [...]

டெஸ்ட் போட்டிகளில் இருந்து இன்றுடன் விடைபெறும் முரளி 800 விக்கெட் வீழ்த்தி சாதனை

(3ம் இணைப்பு)

டெஸ்ட் போட்டிகளில் இருந்து இன்றுடன் விடைபெறும் முரளி 800 விக்கெட் வீழ்த்தி சாதனை
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 08:25.37 AM GMT +05:30 ]
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனையை ஈட்டியுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் இந்த சாதனையை பெறுவதற்காக சற்று முன்னர் 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் [...]

மாறிவரும் சர்வதேசக் கொள்கைகள்…. முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களை நோக்கி நகர்வு !!!!!

மாறிவரும் சர்வதேசக் கொள்கைகள்…. முள்ளிவாய்க்கால் போர்க்குற்றங்களை நோக்கி நகர்வு !!!!!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 01:30.15 AM GMT +05:30 ]
தமிழர்களாகிய​ நாம் சரித்திரத் தவறுகளையே, மீண்டும் மீண்டும் புதிய​ வடிவில் செய்து கொண்டிருக்கின்றோம், நமக்கென்று ஒரு நாடு ஈழத்தில் இருக்கும் போது, அதன் விடுதலைக்கான​ போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கும் போது, நாடு கடந்து புலம் பெயர்ந்த​ நாம், இன்று அதையும் இழந்து நிற்கிறோம்.
நம் தாய் மண் இன்று மாற்றார் கையில். கடந்த​ வருடம் [...]

விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு எப்.பீ.ஐ எச்சரிக்கை

விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலியாவுக்கு எப்.பீ.ஐ எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 05:05.58 PM GMT +05:30 ]
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பீ.ஐயினால் தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய வார இதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தீவிரவாத போக்கு இயக்கங்களோ அல்லது இனப்பிரச்சினையை தூண்டும் அமைப்புகளோ இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வருகிறது.
எனினும் குறிப்பாக அவுஸ்திரேலியாவின் கென்பரா நகரில் வசிக்கின்ற தமிழர்களால் [...]

அணிசேரா நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஐ.நா. குழுவை எதிர்க்கும் இலங்கையின் முயற்சிக்கு முட்டுக்கட்டை

அணிசேரா நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் ஐ.நா. குழுவை எதிர்க்கும் இலங்கையின் முயற்சிக்கு முட்டுக்கட்டை
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 12:54.56 AM GMT +05:30 ]
இலங்கை பற்றியும் இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவுக்கு எதிராக அணிசேரா இயக்கத்தினால் வரையப்பட்ட கடிதம் பற்றியும் நேற்று முன்நாள்…. 
….ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு ன்பாக இடம்பெற்ற மதியநேர விளக்கவுரையின் போதும் பின்னர் மேல் மாடியில் நெல்ஸன் மண்டேலாவின் [...]

ராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பாராம்: ப.சிதம்பரம்

ராஜீவ் சொன்னதைக் கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பாராம்: ப.சிதம்பரம்
[ திங்கட்கிழமை, 19 யூலை 2010, 12:40.34 AM GMT +05:30 ]
நான் பிரபாகரனை நன்கு அறிந்தவன். அவர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையில் இரு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார். இவ்வாறு இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் 108ஆவது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125 வது ஆண்டு [...]

அனைத்து Mobile Phone இல் ஒலிக்கும் லங்காசிறி FM

அனைத்து Mobile Phone இல் ஒலிக்கும் லங்காசிறி FM
[ ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 08:17.38 PM GMT +05:30 ] [ கஜமுகன் ]
லங்காசிறி எஃப் எம் ஆரம்பித்து 3 மாதங்கள் கடந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இவ்வானொலிச் சேவையைானது உலக மக்களை சென்றடைய பல வசதிகள் செய்யப்பட்டு உலகத்தில் எந்த மூலையில் வாழும் தமிழ் மக்களால் கேட்பதற்குரிய புதிய தொழிநுட்பங்களை [...]

வெளிநாட்டு தமிழர்களின் இரகசியங்கள் இலங்கையின் கையில்?

வெளிநாட்டு தமிழர்களின் இரகசியங்கள் இலங்கையின் கையில்?
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 07:37.10 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுச் செயலகமாகவும், புலம்பெயாந்த தமிழர்களின் செயற்பாட்டுத் தளமாகவும் இயங்கிக் கொண்டிருந்த “வெளிநாட்டுப் பிரிவு” அல்லது “கஸ்ரோ செயலகம்” என அழைக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பில் பேணப்பட்ட சகல ஆவணங்களும் முழுமையாக இராணுவத்தால் இறுதிப் போரில் கைப்பற்றப்பட்டதாக கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இலங்கையின் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் போன்றோரும் வெளிநாடுகளில் கடன் கொடுத்தோர் [...]

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் முகமூடி அணிந்தோர் இளம் பெண்கள் மீது தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 20 யூலை 2010, 01:55.43 AM GMT +05:30 ]
கிளிநொச்சியில் விஸ்வமடு மற்றும் தர்மபுரம் பகுதிகளில் இனந்தெரியாத குழுவால் இளம் பெண்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதிகளில் இரு சம்பவங்களில் குடும்பப் பெண்ணொருவர் உட்பட இருவர் தாக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரம் கிழக்கு கிராம சேவையாளரின் உதவியாளராகவுள்ள விஸ்வமடுவைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண்ணொருவர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் [...]

« Previous PageNext Page »