அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 01:43.22 AM GMT +05:30 ]
இலங்கையின் பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியென்று தமிழ்நாடு மாநில சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்நாட்டில் தங்கியிருந்த போது 1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை 4ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு [...]

தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு அரசியல் தலைவர்கள் மன்னிப்புக்கோர வேண்டும்! ஆணைக்குழு முன் பிள்ளையான் சாட்சியம்

தமிழ்மக்கள் சித்திரவதை செய்யப்பட்டமைக்கு அரசியல் தலைவர்கள் மன்னிப்புக்கோர வேண்டும்! ஆணைக்குழு முன் பிள்ளையான் சாட்சியம்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 01:16.23 AM GMT +05:30 ]
தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர். பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும்.
அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக [...]

மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்

மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
[ புதன்கிழமை, 20 ஒக்ரோபர் 2010, 03:01.50 PM GMT +05:30 ]
மட்டக்களப்பு  பொலிஸ் படுகொலைச் சம்பவங்களுக்காக பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
1990ம் ஆண்டு மட்டக்களப்பில் சரணடைய வந்த 600  பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்த குற்றத்திற்காக அவர்களது குடும்பத்தாரிடம் கருணா பொது மன்னிப்பு [...]

இது என்ன ராஜநீதியோ…? புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்து தினமணி ஆவேசம்

இது என்ன ராஜநீதியோ…? புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்து தினமணி ஆவேசம்
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:41.39 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் [...]

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள் ஒற்றுகேட்கப்படவுள்ளன

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகள் ஒற்றுகேட்கப்படவுள்ளன
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:52.20 PM GMT +05:30 ]
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒற்றுக் கேட்பதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக தமிழ் மக்களின் வெளிநாட்டு அழைப்புகளை ஒற்று கேட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால், தொலைத்தொடர்புகள் ஆணையாளரிடம், கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தப்படுகின்ற சிம் அட்டைகளின் உரிமையாளர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
சிம் அட்டைகளை பயன்படுத்தி, [...]

மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்த தமிழ் அகதிகளின் திகில் அனுபவங்கள்: மூன்று பேர் மரணம்

மன்னாரிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணித்த தமிழ் அகதிகளின் திகில் அனுபவங்கள்: மூன்று பேர் மரணம்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 06:21.13 PM GMT +05:30 ]
அவுஸ்திரேலியாவை நோக்கி கடந்த 45 நாட்களாக பயணித்துக்கொண்டிருந்த போது மூன்று பேர் மரணம் அடைந்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்
கிறிஸ்மஸ் தீவுக்கு பயணித்துக்கொண்டிருக்கையில் படகு எரிபொருள் இன்றியும் அதில் உள்ளவர்கள் உணவு மற்றும் நீர் இன்றியும் தத்தளித்து கொண்டிருந்த வேளையில் இந்தோனேசிய கடற்படையினரால் நேற்று [...]

தமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை: பிரதமர்

தமிழ் மக்கள் படுகொலைகள் தொடர்பான படங்கள் வெளியிடப்பட்டமை குறித்து விசாரணை: பிரதமர்
[ வியாழக்கிழமை, 21 ஒக்ரோபர் 2010, 03:45.41 PM GMT +05:30 ]
வடக்கில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைகள் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் குழு ஒன்றை நியமித்துள்ளது.
பிரதமர் டீ.எம்.ஜெயரட்ன பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த புகைப்படங்களை வெளியிட்ட புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் குறித்த [...]

மாளிகாவத்தையில் இராணுவத்தினர் தோண்டிய மர்மக்குழி : பின்னனி என்ன?

மாளிகாவத்தையில் இராணுவத்தினர் தோண்டிய மர்மக்குழி : பின்னனி என்ன?
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:53.57 AM GMT +05:30 ]
மாளிகாவத்தைப் பிரதேசத்தின் சேரிக்குடியிருப்பு பிரதேசத்தை அண்மித்ததாக கடந்த புதன்கிழமை மாலை இராணுவக் குழுவொன்று மர்மக்குழியொன்றைத் தோண்டி எதையோ புதைத்துவிட்டுச் சென்றுள்ளதால் அப்பகுதியெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது.
சுமார் 15 நபர்களைக் கொண்ட இராணுவக் குழுவானது இருட்டும் வேளையில் அப்பிரதேசத்துக்கு வந்துள்ளது. வந்திருந்த அனைவரும் இராணுவ உடையுடன் ஆயுதம் தரித்திருந்துள்ளனர்.
அப்பிரதேச மக்களை வெளியே எட்டிப் [...]

குமரன் பத்மநாதனுக்கு இராணுவ சல்யூட் மரியாதை

குமரன் பத்மநாதனுக்கு இராணுவ சல்யூட் மரியாதை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 07:44.14 AM GMT +05:30 ]
விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவரால் சல்யூட் மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் முல்லைத்தீவின் முத்தையன் கட்டு பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட குழுவொன்றின் தலைமைப் பொறுப்பில் கே.பி.யும் அந்தப் பகுதிக்கு வருகை தந்துள்ளார். அவர்களின் வருகை பற்றிய தகவல் முற்கூட்டியே அப்பகுதி இராணுவ முகாமின் பொறுப்பதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், [...]

ஆலய உற்சவத்தின்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் இருவர் கைது

ஆலய உற்சவத்தின்போது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம்கள் இருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 04:54.59 AM GMT +05:30 ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் உற்சவத்தின்போது தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கலந்த பொருட்களை விற்பனைசெய்த இரண்டு முஸ்லிம் வர்த்தகர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 19ஆம் திகதி கோயில்போரதீவு பிரதேசத்தில் உள்ள பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தில் இந்த போதைப்பொருட்கள் கலந்து பொருட்களை விற்பனை செய்த இருவரையே [...]

« Previous PageNext Page »