தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த இரகசிய ஆவணங்கள் மீட்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த இரகசிய ஆவணங்கள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:57.27 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த இரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக திவயின் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த 20 முக்கியமான இரகசிய ஆவணங்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விஸ்வமடு பிரதேசத்தில் இந்த ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச முக்கியஸ்தர்களான [...]
கொழும்பை அண்மித்த பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை

கொழும்பை அண்மித்த பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:12.23 PM GMT +05:30 ]
கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை தொடக்கம் கல்கிஸை வரையான பிரதேசம் இன்று அதிகாலை முதல் நண்பகலை அண்மிக்கும் வரையில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்றுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அதிகாலை மூன்று மணியளவில் ஆரம்பமான இந்த நடவடிக்கையில் ஏறத்தாழ 1500 அளவிலான பொலிசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
போதைப் பொருட்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள், பாதாள உலகக் கோஷ்டியினரை இலக்கு வைத்தே குறித்த [...]
விமான நிலையத்தில் வைத்து தமிழர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் கழுகுக்கண் பார்வை: அநாவசிய விசாரணை

விமான நிலையத்தில் வைத்து தமிழர்கள் மீது புலனாய்வுப் பிரிவின் கழுகுக்கண் பார்வை: அநாவசிய விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 01:15.59 PM GMT +05:30 ]
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாகப் பயணிக்கும் தமிழர்களையும், சந்தேகத்துக்கிடமான முஸ்லிம்களையும் கண்காணிக்கவென பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்லும், வருகை தரும் தமிழர்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான முஸ்லிம்களை விசாரணை செய்வது அவர்களுக்கிடப்பட்டிருக்கும் பணியாகும். அதற்கான குறுக்கீடற்ற அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் அல்லது [...]
மன்னிப்புக் கேட்க முடியாதென்கின்றார் கருணா…

மன்னிப்புக் கேட்க முடியாதென்கின்றார் கருணா…
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 12:28.23 PM GMT +05:30 ]
1990 ம் ஆண்டளவில் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலை தொடர்பில் தனக்கு மன்னிப்புக் கேட்க முடியாதென்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
குறித்த படுகொலைகளை புலிகளின் உளவுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானுடைய உத்தரவின் பேரில் நியூட்டன் என்பவரே மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ள அவர், அந்தக் கொலைகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்புமில்லாத நிலையில் தான் மன்னிப்புக் [...]
உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டின் தீர்மானத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கு உதவி

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டின் தீர்மானத்தின்படி பாதிக்கப்பட்ட பெண்கள் இருவருக்கு உதவி
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 06:38.42 PM GMT +05:30 ]
உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் அகம்புலம் தமிழர் வாழ்வியல் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய போரினால் பாதிக்கப்பட்ட கிளி. கோணாவில் பிரதேசத்தைச் சோ்ந்த பெண்கள் இருவருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் நடைபெற்ற அகம்புலம் தமிழர் வாழ்வியல் மாநாட்டில் புலத்தில் உள்ள தமிழர்களின் உதவிகளைத் திரட்டி அகத்திலுள்ள தமிழர்களிற்கு உதவுதல் என்ற தீர்மானத்திற்கமைவாகவே மேற்படி [...]
முன்னாள் பெண் புலிகள் 23 பேர் இன்று விடுதலை

முன்னாள் பெண் புலிகள் 23 பேர் இன்று விடுதலை
[ வெள்ளிக்கிழமை, 22 ஒக்ரோபர் 2010, 02:21.18 PM GMT +05:30 ]
முன்னாள் புலிகளாக இருந்து அரச படைகளிடம் சரணடைந்துள்ள ஆயிரம் பேரளவிலானோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக புனருத்தாபன, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்த 23 பெண்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் இன்று யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் வைத்து அவர்களின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டனர்.
அமைச்சர் டியூ குணசேகர மற்றும் பிரதியமைச்சர் [...]
பாணின் விலை உயர்வால் யாரும் சாவப்போவதில்லை: அமைச்சர் வீரவன்ச

பாணின் விலை உயர்வால் யாரும் சாவப்போவதில்லை: அமைச்சர் வீரவன்ச
[ சனிக்கிழமை, 16 ஒக்ரோபர் 2010, 04:18.54 AM GMT +05:30 ]
பாணின் விலை உயர்வதனால், நாட்டில் யாரும் சாவப்போவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், பாணின் விலை உயர்த்தப்படுவதன் காரணமாக, நாட்டின் இறைமை பாதுகாக்கப்படுகிறது.
அத்துடன் நாட்டின் உணவு பாதுகாப்பும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அரசாங்கங்கள், பாணின் விலையை 3ரூபா 50 சதத்திற்கு தரப்போவதாக [...]
மட்டக்களப்பில் விடுலைப்புலிகளின் இரகசிய முகாம்…?

மட்டக்களப்பில் விடுலைப்புலிகளின் இரகசிய முகாம்…?
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 10:35.32 AM GMT +05:30 ]
மட்டக்களப்பு தொப்பிகலை பிரதேசத்தின் அலியாஓடை பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்ட இரகசிய முகாம் ஒன்று அமைந்துள்ளதாக விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
புலிகளால் குறித்த முகாமுக்கு போ சிக்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது. விடுதலைப் புலிகள் கிழக்கில் பலமாகச் செயற்பட்ட காலத்தில் அந்த முகாம் அருணா குமாரப்பன் நியூட்டன் மற்றும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் [...]
தமது அதிகார பகிர்வு திட்டத்தை மஹிந்த, மன்மோகன் சிங்கிடம் விளக்கினார்

தமது அதிகார பகிர்வு திட்டத்தை மஹிந்த, மன்மோகன் சிங்கிடம் விளக்கினார்
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 03:32.23 PM GMT +05:30 ]
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இலங்கை ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின்போது, தமிழர்களின் மனங்களை வெல்லும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது
மஹிந்த ராஜபக்சவுக்கு பகல் போசனத்தை வழங்கிய மன்மோகன் சிங் பின்னர் அவருடன் நடத்திய சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் [...]
வேலணையில் இளம்பெண் மீது 10 பேர் கொண்ட குழு பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி

வேலணையில் இளம்பெண் மீது 10 பேர் கொண்ட குழு பலாத்காரம்: பாதிக்கப்பட்டவர் தற்கொலை முயற்சி
[ வெள்ளிக்கிழமை, 15 ஒக்ரோபர் 2010, 10:28.23 AM GMT +05:30 ]
வீட்டிலிருந்த இளம்பெண்ணை வெளியில் இழுத்து வந்து பாலியல் பலாத்காரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி பொலிஸ் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களின் பாராமுகத்தால் மூடிமறைக்கப்பட்டபோதும் பாதிக்கப்பட்ட பெண் அலரி விதை உட்கொண்டதைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் [...]