அரசாங்கத்தின் இளைய தலைமுறைத் தமிழ் தலைவராக ரங்காவை உருவாக்க அரசு முனைப்பு

அரசாங்கத்தின் இளைய தலைமுறைத் தமிழ் தலைவராக ரங்காவை உருவாக்க அரசு முனைப்பு
[ சனிக்கிழமை, 25 செப்ரெம்பர் 2010, 02:55.53 PM GMT +05:30 ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இளைய தலைமுறைத் தமிழ் தலைவராக பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்காவை அரசாங்கம் உருவாக்கி வருவதாக சிங்கள இணையமொன்று ஆய்வுக் கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது.
இதுவரை காலமும் அரசாங்கத்தினால் போற்றி புகழப்பட்ட ஈ.பி.டி.பி.யின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவனந்தா மற்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் [...]

சரத் பொன்சேகா தொடர்பான நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கு நடவடிக்கை

சரத் பொன்சேகா தொடர்பான நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கு நடவடிக்கை
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, 03:29.48 PM GMT +05:30 ]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தொடர்பான நினைவுச் சின்னங்களை அழிப்பதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாக சிங்கள இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டிருந்த பதக்கங்கள் மற்றும் பதவிகள் அண்மையில் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, சரத் பொன்சேகா படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் நினைவுத் தூபிகளில் பொறிக்கப்பட்டுள்ள பெயரை அகற்றும் [...]

நிராகரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நியமனத்தைச் செய்த ரணிலின் செய்கை கண்டிக்கத்தக்கது: செல்வம் அடைக்கலநாதன்

நிராகரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நியமனத்தைச் செய்த ரணிலின் செய்கை கண்டிக்கத்தக்கது: செல்வம் அடைக்கலநாதன்
[ சனிக்கிழமை, 18 செப்ரெம்பர் 2010, 03:18.39 PM GMT +05:30 ]
பாராளுமன்றப் பேரவைக்குச் செய்யப்படுகின்ற நியமனத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைத் தான் நியமனம் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பதை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பாராளுமன்றப் பேரவைக்கான நியமனம் குறித்து ஊடகங்களுக்கு ரணில் விக்கிரமசிங்க [...]

வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

(2ம் இணைப்பு)

வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 09:01.06 AM GMT +05:30 ]
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மகள் தர்ஷிகாவின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து [...]

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்

யாழப்பாணத்தில் தமிழரை புது விதமாக ஏமாற்றும் சிங்கள பேர்வழிகள்
[ புதன்கிழமை, 28 யூலை 2010, 08:35.09 AM GMT +05:30 ]
வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் [...]

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி

கொழும்பில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு பொலிஸார் பலி
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:52.26 PM GMT +05:30 ]
கொழும்பு, நாரஹென்பிட்டி பிரதேசத்தின், எல்விட்டிகல பகுதியில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, இரண்டு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவரும், நீச்சல் பயிற்றுவிப்பாளர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த  பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியதாகவும், அவரைக் காப்பற்றச் சென்ற பயிற்றுவிப்பாளரும் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். [...]

பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால அறிவிப்பு

பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் உள்ளதாக அமைச்சர் மைத்திரிபால அறிவிப்பு
[ சனிக்கிழமை, 24 யூலை 2010, 02:45.38 PM GMT +05:30 ]
பிரதமர் பதவியை வகிக்கும் எதிர்பார்ப்பு தம்மிடமும் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பதவிகளை தாம் துரத்திப் போகவில்லை என்ற போதிலும், சாதாரண மனிதன் என்ற ரீதியில் தமக்கும் விருப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதமர் பதவி தமக்குக் கிடைக்கும் என அவர் [...]

கற்பிட்டி குண்டு வெடிப்பில் ஒருவர் பலி

கற்பிட்டி குண்டு வெடிப்பில் ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 05:01.42 AM GMT +05:30 ]
கற்பிட்டி பள்ளிவாசல்துறை பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகினார்.
32 வயதுடைய ஒருவரே நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலியானதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவர் பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் உள்ள இலங்கை வான்படை பயிற்சி மைதானத்தில் வெடிக்காத நிலையில் இருந்த இந்த ஒரு அடி நீளமான குண்டை கண்டெடுத்துள்ளார்.
பின்னர் இதனை இளநீர் உரிப்பதற்கு முற்பட்டவேளையிலேயே [...]

விமல் வீரவன்சவின் நாடகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடி : லக்ஸ்மன் கிரியெல்ல

விமல் வீரவன்சவின் நாடகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடி : லக்ஸ்மன் கிரியெல்ல
[ வியாழக்கிழமை, 22 யூலை 2010, 04:51.50 AM GMT +05:30 ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் அண்மையில் அரங்கேற்றப்பட்ட நாடாகம் சர்வதேச உறவுகளுக்கு விழுந்த பேரிடியாக கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
விமல் வீரவன்சவின் நாடகத்தினால் ஆலோசனைக் குழுவின் எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூவரடங்கிய ஆலோசனைக் குழுவிற்கு உதவி வழங்கும் [...]

நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையமும் பசில் ராஜபக்சவின் பொறுப்பில்

நிலக்கண்ணி அகற்றும் மத்திய நிலையமும் பசில் ராஜபக்சவின் பொறுப்பில்
[ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 02:39.34 AM GMT +05:30 ]
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலகண்ணி வெடிகளை அகற்றுவதற்காக தேசிய தொடர்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதுவும் வடமாகாண ஜனாதிபதி செயற்குழுவின் தலைவர் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய [...]

« Previous PageNext Page »