கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த தகவல் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை: டக்ளஸ்

கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த தகவல் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை: டக்ளஸ்
[ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 02:55.35 AM GMT +05:30 ]
நாட்டிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டது, அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களின் காணிகளும் வழங்கப்படமாட்டது, என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு பி.பி.ஸி. க்குத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்றுக் [...]

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவை சந்திக்க தாம் பயப்படவில்லை: சரத் பொன்சேகா

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவை சந்திக்க தாம் பயப்படவில்லை: சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 03:32.19 PM GMT +05:30 ]
ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பேரைக்கொண்ட நிபுணர் குழுவை சந்திக்க தாம் பயப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்டம்  மீதான நாடாளுமன்றத்தில் குழு நிலை விவாதம் இன்று நடைபெற்ற போது உரையாற்றிய அவர், இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் மீது சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை போக்குவதற்கு [...]

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி

சிறுபான்மையினர் மீது ஏற்படுத்திய அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி
[ திங்கட்கிழமை, 05 யூலை 2010, 08:56.32 AM GMT +05:30 ]
வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.
தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறாது தடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டுமென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.
கண்டி விகாரமகாதேவி மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து உரையாற்றும் போதே [...]

சந்திரிகாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு கடூழிய சிறைத்தண்டனை

சந்திரிகாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு கடூழிய சிறைத்தண்டனை
[ செவ்வாய்க்கிழமை, 29 யூன் 2010, 01:41.22 PM GMT +05:30 ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்கவின் காலகட்டத்தில், பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் குணரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் 4 வருட கடுழிய சிறைத்தண்டனையையும் 50 ரூபா அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2002 ஆம் ஆண்டு ஹங்குராங்கெத்த  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை பயமுறுத்தியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதே இந்த தீர்ப்பு இன்று [...]

வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவக் குடியிருப்புக்கள்: இராணுவ தளபதி மகாநாயக்கர்களிடம் தெரிவிப்பு

வடக்கு, கிழக்கில் நிரந்தர இராணுவக் குடியிருப்புக்கள்: இராணுவ தளபதி மகாநாயக்கர்களிடம் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 27 யூன் 2010, 05:25.14 AM GMT +05:30 ]
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிரந்தர இராணுவக் குடியிருப்புக்களை நிறுவவும், அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் படையினருக்கு நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கவும், அந்தந்தப் பகுதிகளில் அவர்கள் நெல் உற்பத்தி மற்றும் விவசாயம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பொசன் பண்டிகையை முன்னிட்டு இராணுவத் தளபதி [...]

75 ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்

75 ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மலேசியாவில் இன்று ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 04:06.46 AM GMT +05:30 ]
மலேசிய முகாம்களில் அடைபட்டிருக்கும் 75 ஈழத்தமிழர்களை உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். உட்பட்ட  ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மலேசியாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் நோக்கி நாளை பேரணி நடக்கவுள்ளது.
இது பற்றி அறிவித்திருப்பதாவது:-
1. மலேசியாவில் முகாம்களில் அடைத்து வைத்துள்ள  75 ஈழத்தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்து அவர்கள் விரும்பும் இடத்திற்கு [...]

கே.பி. உடன் இணைந்து வடக்கின் புனரமைப்புக்கு உதவ புத்திஜீவிகள் குழு இலங்கை வருகை: சண்டே ஒப்சேவர்

கே.பி. உடன் இணைந்து வடக்கின் புனரமைப்புக்கு உதவ புத்திஜீவிகள் குழு இலங்கை வருகை: சண்டே ஒப்சேவர்
[ ஞாயிற்றுக்கிழமை, 20 யூன் 2010, 07:36.16 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனுடன் இணைந்து அரசாங்கத்தின் போருக்கு பின்னரான கட்டுமான பணிகளுக்கு உதவ 9 பேரைக் கொண்ட புத்திஜீவிகள் குழுவினர் முன்வந்துள்ளனர் என இலங்கையின் அரச செய்தித் தாளான சண்டே ஒப்சேவர் தகவல் வெளியிட்டுள்ளது.
கனடா, சுவிட்ஸர்லாந்து, ஜேர்மனி, ஐக்கிய [...]

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி

நாடு கடந்த தமிழீழ அரசாங்க மக்கள் பிரநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் – ஜேர்மனி
[ சனிக்கிழமை, 19 யூன் 2010, 02:56.03 PM GMT +05:30 ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜேர்மனியின் Nordrhein-Westfalen மாநிலத்தில் (தேர்தல் தொகுதி 3) 20.06.2010 ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுகிறது. வாக்களிப்பு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடம் பெறும்.
இத் தேர்தல் தொகுதியில் ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் நான்கு பிரதிநிதிகள் [...]

இலங்கையில் பால்மா விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் பால்மா விலைகள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு
[ சனிக்கிழமை, 19 யூன் 2010, 02:46.19 PM GMT +05:30 ]
இலங்கையில் அத்தியாவசியப் பொருளான பால்மாக்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் 400 கிராம் பொதியை கொண்ட அனைத்து பால்மாக்களும் 19 ரூபாவால் விலையுயர்த்தப்படவுள்ளன. 
ஒரு கிலோ நிறையைக்கொண்ட பால்மாக்கள் 48 ரூபாவால் விலையுயர்த்தப்படவுள்ளன.
இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆடம்பர பொருளான வாகனங்களுக்கான வரிகள் அரைவாசியால் குறைக்கப்பட்டதன் காரணமாக வாகனங்களின் விலை [...]

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் தமிழர் விடயம்

ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் தமிழர் விடயம்
[ வியாழக்கிழமை, 17 யூன் 2010, 02:42.34 AM GMT +05:30 ]
தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை சபையின் 14வது கூட்டத் தொடரின் போது, ஐ.நா மண்டபத்தில் பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினால், பல வேறுபட்ட கூட்டங்கள் பிராந்தியங்கள், இனங்கள், மொழிகள், சமயங்கள் என்ற ரீதியில் நடைபெற்றன.
இந்த ரீதியில், “சர்வதேச சர்வ நம்பிக்கை” என்ற அமைப்புடன் இணைந்து, இமாலயன் காலச்சார [...]

« Previous PageNext Page »