15 மணித்தியாலத்தில் சஜீவனின் அன்பளிப்பு (£ 16,958.92) கிடைக்கப்பெற்றுள்ளது

 

17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி தமிழ்வின் ஊடாக அன்பளிப்பை கேட்டிருந்தார்.

அவருடைய இரு கைகளின் சத்திரசிகிக்சைக்கான மொத்த நிதி இந்திய ரூபாய்ப்படி 12 இலட்சம் தேவைப்படும் என கேட்டிருந்த நிலையில் அவ் மொத்தநிதி 15 மணித்தியாலங்களில் பெரும் உள்ளம் கொண்ட மக்களால் உதவப்பட்டுள்ளது. லங்காசிறி மற்றும் தமிழ்வின் இணையத்தளங்கள் சேர்ந்து இந்த சேவையை செய்திருந்தது. ஏராளமான மக்கள் முன்வந்த பணவுதவிகளை செய்திருந்தனர். இச் சிறுவனுக்கு சிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க [...]

சர்வதேசத்தையும் இலங்கை ஏமாற்றியது; இறுதியுத்தத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனராம்: ஐ.நா. அதிகாரி கோர்டன் வெய்ஸ்

 

இலங்கை அரசிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் தெரிவித்துள்ளார் 

இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது 14 [...]

பொன்சேகாவுக்கு உதவியதாக கோத்தபாய சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்காவும் நோர்வேயும் கடும் தொனியில் மறுத்துள்ளன

 

இலங்கையில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவின் பிரசாரங்களுக்கு நிதியளித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நோர்வேயும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தக்குற்றச்சாட்டை சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் ஸ்ரெயிட் டைம்ஸ் செய்திதாளுக்கு இன்று வழங்கிய செவ்வியில் சுமத்தியிருந்தார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நோர்வே, ஏனைய நாடுகளின் தேர்தல்களிலும் ஜனநாயகத்திலும் தமது நாடு தலையிடாது என தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நோர்வேயின் தூதுவர் டோர் ஹட்ரம் [...]

தலைவர் பிரபாகரன் மரணச் சான்றிதழை வழங்குவதில் சட்டச் சிக்கல்: இலங்கை அறிவிப்பு

 

 

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான ஆவணங்களை இந்தியாவிடம் வழங்குவதற்கு பல்வேறு சட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டி உள்ளது. அவரது மரணச் சான்றிதழை வழங்குவதற்கு பல நடைமுறைகளும், கால அவகாசமும் தேவைப்படும் என்று இலங்கை கூறியுள்ளது

முள்ளிவாய்க்காலில் நடந்த மோதலில் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை கூறியது. இதை விடுதலைப் புலிகள் மறுத்தனர். பின்னர் ஆமாம் என்று ஒரு தரப்பினர் கூறினர். தற்போது பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சை முடிவில்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டார் [...]

சரத் பொன்சேகாவுக்கு இராணுவச்சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்

 

 

கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகா, நேற்று கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

இந்தநிலையில் அவர் மீது இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படை தலைமையதிகாரியாக இருந்துகொண்டே எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தமை, இராணுவத்தின் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்தமை மற்றும் இராணுவத்தில் தப்பி வந்தவர்களை தம்முடன் வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன் [...]

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது

 

 

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை அரசாங்கம் நிறுத்தாவிடின், தனக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை. அரசாங்கத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக முன்னாள் இராணுவ தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளருமான சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தம்மை துன்புறுத்தும் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் தம்மிடம் ஆவணங்கள் இருந்ததாகவும், எனவேதான் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாகவும் சரத் பொன்சேகா [...]

சரத் பொன்சேகாவின் அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைத்து தேடுதல்

ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் மற்றுமொரு அடியாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் 200 க்கு மேற்பட்ட விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் ரோயல் கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் [...]